அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை தொடர்பில் பிராந்திய எதிரி நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான பேச்சுவார்த்தை விசா விநியோகிப்பது தொடர்பான சிக்கலால் முடங்கியுள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் செயலிழந்திருக்கும் சூழலில், எவ்வாறு விசா விநியோகிப்பது என்பது குறித்து இரு தரப்புக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இரு நாட்டு இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே ஈரான் தூதுக் குழு ஒன்று கடந்த வாரம் சவூதி சென்று பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. நான்கு நாள் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் யாத்திரிகர்களுக்கான சவூதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஈரான் ஹஜ் அமைப்பின் தலைவர் ஒஹதி அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்.


எனினும் ஈரான் மற்றும் சவூதியில் இருக்கும் இரு நாட்டு தூதரகங்களும் செயற்படாத நிலையில் ஈரானியர்களுக்கான விசா விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


“விசா விநியோகம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை” என்று ஒஹதி குறிப்பிட்டார். “சவூதி இதுபற்றி தெளிவான தீர்வொன்றை தரவில்லை” என்று அவர் தெரிவித்தார்.


ஈரானுக்குள்ளேயே விசா விநியோகிக்கப்பட வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.


தற்போது ஈரானுக்கான சவூதிய இராஜதந்திர பணிகள் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊடே இடம்பெறுகிறது. எனினும் மூன்றாவது நாட்டின் ஊடாக ஹஜ்ஜுக்கான விசாவை விநியோகிப்பது முற்றாக ஏற்க முடியாதது என்று ஈரான் கலாசார அமைச்சர் அலி ஜன்னத் குறிப்பிட்டுள்ளார்.


சவூதி ஷியா மதத் தலைவர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்ததை அடுத்தே இந்த ஆண்டு ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-