அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பாலஸ்தீனின் இதயப்பகுதியான ஜெரூசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் (அல் அக்ஸா) பள்ளிவாசல் இடம் தங்களுக்கு தான் முழு உரிமையும் உள்ளது என்று யூதர்கள் பல ஆண்டுகாலமாக கூறிவருகின்றனர்.
மத கோட்பாடுகளின் அடிப்படையில் தங்களின் கருத்தை உண்மையாக்கும் விதத்தில் அல்குத்ஸ் மற்றும் மேற்கு சுவர் அமைந்துள்ள இந்த பகுதியை டெம்பில் மவுண்டன் என்று அழைத்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியை ஆராய்ச்சி என்ற பெயரில் பல அடி ஆழத்துக்கு தோண்டி எடுத்து தங்களின் கருத்தை உண்மையாக்க தங்களுக்கு சாதகமான ஆதாரங்களை தேடி வருகின்றனர்.
ஆனால் இன்றுவரை யூதர்களுக்கு சாதகமான ஆதாரங்கள் கிடைப்பதாக இல்லை, மாறாக அல்குத்ஸ் பள்ளிவாசல் இத்தகைய செயல்பாடுகளால் தனது பலத்தை இழந்து வருகிறது..
இஸ்ரேலின் செயலால் அல் குத்ஸின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உடைந்துவிடும் அபாயம் இருப்பதாக பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஐநாவின் யுனஸ்கோ நிறைவேற்றியுள்ளது.
அந்த தீர்மானத்தில் அல் அக்ஸா வளாகம் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்றும் யூதர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென்று கூறப்பட்டுள்ளது.


-என்.எஸ்.ஏ.கதிர்

Thanks :  http://www.iran-daily.com/News/139920.html
முகநூல் முஸ்லிம் மீடியா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-