அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சோம்பு வெறும் ருசிக்காக உணவில் சேர்க்கும் பொருளாக தான் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளோம். பலரும் சோம்பை அன்றாட உணவில் சேர்ப்பதில்லை. ஆனால், அன்றாட உணவில் சோம்பை சிறிதளவு சேர்த்து வந்தால் உடலில் நிறைய நேர்மறை மாற்றங்கள் உண்டாகும்.

செரிமான கோளாறுகளை தடுக்க, இரைப்பை சார்ந்த நோய் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண, ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, நீரிழிவு மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்த என உடலுக்கு நிறைய நன்மைகள் விளைய எளிய பொருளாக திகழ்கிறது சோம்பு….

சோம்பு செரிமான பாதையை சுறுசுறுப்படைய வெகுவாக உதவுகிறது. மேலும், அஜீரண வாயுவை கோளாறுகளை சரி செய்யவும், குழந்தைகள் மத்தியில் உண்டாகும் அஜீரணப் பிரச்சனைகளை தீர்க்கவும் சோம்பு உதவுகிறது.

அன்றாட உணவில் சோம்பை சிறிதளவு சேர்த்து உண்டு வந்தால் இரப்பை குறைபாடுகளில் இருந்து எளிதாக சீரான முறையில் தீர்வுக் காண முடியும்.

சோம்பின் இலை மற்றும் விதைகள் இரைப்பை சம்பந்தமான நோய், சுரம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்த சிறந்த மருந்தாக பயனளிக்கிறது. பச்சை இலைகளை வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க பயன்படுத்தலாம்.

மேலும், சோம்பு மூளைக்கு சுறுசுறுப்பு அளிக்கவல்லது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும், கண் ஆரோக்கியம் அதிகரிக்கவும் வெகுவாக பலனளிக்கிறது.

மேலும் சோம்பை நீரில் கலந்து அல்லது தேநீரில் கலந்து தினமும் குடித்து வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சோம்பிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் வயிற்றில் இருக்கும் நச்சுக் கிருமிகளை ஒழிக்க உதவுகிறது.

சோம்பில் இருக்கும் மூலப் பொருட்களானது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க வல்லது. இதனால் சீரான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, நீரில் சோம்பு கலந்த குடித்து வந்தால் உடம்பில் தேங்கியுள்ள ஊளைசதைதை குறைந்து உடல் மெலியலாம்.

நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த ஓர் துணை மருந்தாக சோம்பு பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சோம்பு தண்ணீர் செய்முறை !


1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-