அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்கள் தொடங்க வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது எனவே இந்த வாய்ப்பை பயன் படுத்தி தொழில் நிறுவனங்களை இந்தியாவில் துவக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார் இந்தியாவின் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா. துபாய் வருகை தந்த அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு துபாய் இந்திய துணை தூதரகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு துணை தூதர் அனுராக் பூஷன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா பேசுகையில்இந்தியாவின் சிறு மற்றும் குறு நடுத்தர தொழில்கள் அபார வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாக தேசிய சிறு தொழில் கார்ப்பரேசன் தென் ஆப்பிரிக்கா, தான்சானியா,எத்தியோப்பியா, செனகல்,புரூண்டி,உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிறு தொழில் நிறுவனங்களை உருவாக்க அந்நாடுகளின் அரசுக்கு உதவி வருகிறது.ஐதராபாத்தில் உள்ள தேசிய தொழில் நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவில் தொழில் புரட்சியை ஏற்படுத்தும். பல நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் செலுத்துகின்றனர். சிறுதொழில் நிறுவனங்கள் எளிதில் தொழில் தொடங்கும் வகையில் பதிவு செய்யும் பணிகள் எளிதாக்கப்பட்டுள்ளது இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தொழில் நிறுவனங்களை அதிக அளவில் தொடங்க முன் வர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-