அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய்: பெரிய நதிகளோ, தொடர் மழையோ ,பெரிய‌ஆறுகளோ, இல்லை ஆனாலும் குளிர் பிரேதசம் போன்று சாலைகள் மலர் பூங்கா போன்று சாலைகள் காட்சியளிப்பது பாலைவனம் நிறைந்த வளைகுட நகரங்களில் ஒன்றான துபாயில்தான். துபாய் அரசாங்கம் நகரின் அனைத்து நகரின் நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான‌ வண்ண மலர்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது . ஆண்டு தோறும் இப்பணிகளில் 1700க்கும் மேற்பட்டோர் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

துபாயில் பல்வேறு இடங்களில் ஆண்டுதோறும் 37 லட்சத்திற்கும் அதிகமான மலர்கள் நடப்படுகிறது. ஆண்டுக்கு மூன்று கட்டங்களாக இந்த வண்ண‌ மலர்கள் நடப்படுகிறது செப்டம்பர் முதல் அக்டோபர் ஜனவரி முதல் பிப்ரவரி வரை மே முதல் ஜூன் வரை என மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்ட விதவிதமான மலர்கள் நடவு செய்யப்படுகிறது. மலர்களுக்கான‌ விதைகள் அதிகப்படியாக இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

பொர்டுலகா,வின்கா,ஜின்னிய ,பெடுனியா,அலிசும் உள்ளிட்ட மலர் வகைகள் அதிகம் இடம்பெறுகிறது.ஆண்டுதோறும் புது வகையான மலர்களும் நடப்பட்டு வருகிறது.இம்மலர்களை பராமரிப்பதற்கு நீர் மேலாண்மை முறையாக செய்யப்பட்டு நீர் பாய்ச்சப்படுகிறது. மலர்களில் காலம் நிறைவு பெறும்போது உடனடியாக அகற்றப்பட்டு புதிய மலர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

துபாயில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இம்மலர் சாலைகள் சுற்றுலா வெகுவாக கவர்கிறது என்றால் மிகையில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-