அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மும்பை : மொபைல் மூலமான வங்கி பரிவர்த்தனைகள் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பர் - டிசம்பர் காலாண்டின் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனை இதற்கு முந்தைய ஆண்டை விட 82 சதவீதம் வளர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நேஷனல் பேமன்ட் கார்ப்பொரேஷனின் கனவு திட்டமான யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை முறையை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதன் சிறப்பு அம்சங்கள்:

* வேறு நபரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பலாம்.
* தனித்தனி இ-வாலட்டுகளுக்கு மாற்றாக மிக எளிதாக அனைத்து பண பரிமாற்றமும் மேற்ெகாள்ளலாம்.
* மொபைல் ஆப் பரிவர்த்தனையின்போது தனிநபர் தகவல்கள் கேட்கப்படுவதுண்டு. இதில் அதற்கெல்லாம் அவசியமில்லை.
* வங்கி விவரங்கள் எதையும் பதிவு செய்யாமலேயே, விர்ச்சுவல் முகவரி மூலம் பாதுகாப்பான பரிவர்த்தனை செய்யலாம்.
* வங்கிக்கணக்குடன் இணைந்த ஆதார், மொபைல் எண் மூலமாகவும் பரிவர்த்தனை செய்ய முடியும்.
* கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பொருள் வாங்கும்போது விவரங்கள் திருடப்படுவது போன்ற எதுவும் யுபிஐ முறையில் நடக்காது.
* ஒரே இடத்தில் அனைத்து பண பரிமாற்ற செயல்பாடுகளையும் இது ஒருங்கிணைக்கிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-