அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நாட்டில் எஸ்சி, எஸ்டி பிரிவு மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சில சாதியைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களுக்கு புலம் பெயரும்போது, எஸ்சி, எஸ்டி அந்தஸ்தை இழப்பதாகக் கூறப்படுவது கவலை அளிக்கிறது. அத்தகைய சாதியைச் சேர்ந்தவர்களை எஸ்சி, எஸ்டி ஆக அங்கீகரித்து இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்ட (எஸ்சி) இனவரிசை (திருத்த) மசோதா 2016 மீதான விவாதத்தின்போது சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் கூறும்போது, “மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒரு உறுப்பினர் கோருகிறார். இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-