அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மழை காலத்தில் வழக்கமாக நகரவாசிகள் சொல்வார்கள், “எப்பா... வெயில் அடிச்சாக் கூட திட்டிக் கிட்டே வேலை பார்த்துடலாம்... ஆனா இந்த மழை வாட்டி எடுக்குப்பா... எங்கேயும் வெளியில கூட போக முடியல...” ஆம். நாம் அப்படி பழகி விட்டோம். மழை, குளுமை குறித்த சித்தரிப்புகள் நம் மனதளவில் இருந்தாலும், பணம், பிரதானமான நம் நடைமுறை வாழ்க்கையில் நம்மையும் அறியாமல் மழையையை விட, வெயிலை தான் அதிகம் விரும்புகிறோம். வெயில் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் மட்டும் தரவில்லை. அது, சில நோய்களையும் வழங்கி வருகிறது. அதில், பிரதானமானது மஞ்சள் காமாலை.மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல:

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது நோய்கான குறியீடு ஆகும். உடலில் ஏற்பட்டுள்ள தொற்று நோய்க்ளையும், புற்று நோய்களையும் வெளிப்படுத்தும் அறிகுறிதான் மஞ்சள் காமாலை. கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மஞ்சள் காமாலை ஏற்பட காரணம். தரமற்ற குடிநீர், புகை மது பழக்கம் ஆகியவைகளால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு கல்லீரல் கெட்டு, அது மஞ்சள் காமாலையாக வெளிப்படுகிறது. கண் மஞ்சள் நிறமாவது, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது ஆகியவை மஞ்சள் காமாலைக்கான் அறிகுறிகளாக இருக்கின்றன. ஆனால், முறையான ரத்த பரிசோதனை மூலம் நோயை கண்டறிவதுதான் சிறந்தது.

மஞ்சள் காமாலை வகைகள்:

ஆங்கில மருத்துவமுறையில் மஞ்சள் காமாலையை ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ என்று பல வகைகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், ஹெபடைடிஸ் சி, மற்றும் டி வகைகள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

ஹெபடைடிஸ் ஏ, பி க்கான காரணம் நாம் தினந்தோறும் பருகும் மோசமான குடிநீர், உண்ணும் தரமற்ற உணவு மற்றும் ஏற்கெனவே நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட ஊசியை இன்னொருவருக்கு செலுத்துவது ஆகியவை சொல்லப்படுகின்றன. இதற்கு தடுப்பூசி உண்டு.மன உளைச்சலும், மஞ்சள் காமாலையும்:

சிலருக்கு தூய்மையான நீர், தரமான உணவு அருந்தினாலும் மஞ்சள் காமாலை வரும். அதற்கு காரணம் அதிக வேலை அழுத்தமும், அது தரும் மன உளைச்சலும்தான். வாரத்திற்கு ஒரு நாளாவது அனைத்து அழுத்தங்களிலிருந்தும் விட்டுபட்டு, மனதிற்கு பிடித்தமான வேலை செய்வது மூலமும், மஞ்சள் காமாலை வருவதை தடுக்கலாம்.

உணவு காட்டுபாடு:

மஞ்சள் காமாலைக்கு உணவு கட்டுபாட்டைவிட சிறந்த மருந்து இல்லை. ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ள பொருட்களையும், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து குறைந்த உணவையும் உட்கொள்ள வேண்டும். மாமிச உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. உப்பு, காரம் வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
வருமுன் காப்போம்:
மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து, கீழாநெல்லி. தினமும் பச்சையாக சில இலைகளை உணபதன் மூலம் மஞ்சள் காமாலையை தடுக்கலாம், குணப்படுத்தலாம்.
வெயில் காலத்தில் ஆண்கள் சனி, புதன்கிழமையும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும், மஞ்சள் காமாலை வருவதை தடுக்கும்.
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, ஆவாரை, சோற்றுக் கற்றாழை இவற்றில் எது கிடைத்தாலும், அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதால் சூடு குறைவதுடன், கல்லீரல் இயல்பாகச் செயல்பட ஏதுவாக இருக்கும்.
அதிகம் மசாலா கலந்த உணவு பொருட்களை வெயில் காலத்தில் தவிர்ப்பது நலம்.
நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய் போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது வெயில் காலத்திற்கு மிக நல்லது.
வெயில் காலத்தில் மட்டுமல்ல எப்போதும் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பது மிக நல்லது.
மதியம் வேலைகளில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த இரண்டு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.


- சித்தன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-