அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் அந்த கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மீண்டும் போட்டியிடுகிறார். உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடமே கொடுத்து விடுவதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், சென்னை கோபாலாபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று சந்தித்தார். அப்போது, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராமநாதபுரத்தில் மீண்டும் தான் போட்டியிடப் போவதாகக் கூறினார். மேலும், ஆம்பூர் தொகுதியில் நசிர் அஹமதுவும், நாகையில் ஜெபருல்லாவும், தொண்டாமுத்தூரில் கோவை செய்யது முஹமதுவும் போட்டியிடுவார்கள் என கூறினார். ஆனால், உளுந்தூர்பேட்டை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடாது என்றும், அந்த தொகுதி மீண்டும் திமுகவிடம் திருப்பி கொடுக்கப்படும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.இந்த நிலையில், இன்று தி.மு.க வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட முடியாத நிலையில், அந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் ஜி.ஆர். வசந்தவேல் போட்டியிடுவார் என கூறியுள்ளது.

இதன் மூலம் இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-