அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


  
பெரம்பலூரில் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி நடந்து சென்று ஓட்டு கேட்டார். அப்போது அவர் ரோட்டோர கடையில் டீ குடித்து ஆதரவு திரட்டினார். 

மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வேனில் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். மதுரையில் இருந்து கடந்த 15-ந் தேதி பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். 

நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் வந்த ஸ்டாலின் அங்குள்ள கட்சி அலுவலகத்தில் தங்கினார். நேற்று காலை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் வேனில் புறப்பட்டார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்பட தி.மு.க. நிர்வாகிகள் உடன் சென்றனர்.


நடந்து சென்று ஓட்டு சேகரிப்பு

அங்குள்ள சங்குப்பேட்டை பகுதியில் வேன் சென்றபோது வேனை நிறுத்த சொன்ன ஸ்டாலின், திடீரென வேனில் இருந்து இறங்கி நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து பேசப்போவதாக கூறிவிட்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார். இதை கட்சி நிர்வாகிகள் மற்றும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வியப்படைந்தனர்.

பெரம்பலூரில் உள்ள பெரிய கடை வீதி வழியாக சென்ற ஸ்டாலின் அங்குள்ள ஒவ்வொரு கடைக்கும் சென்று தி.மு.க. கூட்டணி கட்சியான சமூக சமத்துவ படை கட்சியின் வேட்பாளர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமிக்கு ஆதரவு திரட்டினார்.

ரோட்டோர கடையில் டீ குடித்தார்

அங்குள்ள ரோட்டோர டீக்கடைக்கு சென்று டீக்கடை முன்பு நின்று டீ குடித்தார். அங்கு டீ குடித்து கொண்டிருந்தவர்களிடம் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்டார்.

சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின் காமராஜர் வளைவு சென்றவுடன் வேனில் ஏறி குன்னம் புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் குன்னம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்க.துரைராஜூக்கு ஆதரவு திரட்டினார். 
 பெரம்பலூர்: சட்டசபை தேர்தலுக்காக மேடைகளில் பேசிவந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென பெரம்பலூரில் 'நமக்கு நாமே' பாணியில் வீதிகளில் இறங்கி வாக்கு சேகரிக்க பிரசாரம் களைகட்டியது. திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின். மேடைகளில் ஏறியும் வேனில் நின்றபடியுமான வழக்கமான பிரசார பாணியைத்தான் ஸ்டாலின் கடைபிடித்து வந்தார். பெரம்பலூரில் இன்று பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் திடீரென வீதிகளில் இறங்கி நடந்தபடியே வாக்கு சேகரித்தார். இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் ஆராவாரம் செய்தனர். தொண்டர்களும் உற்சாகமடைந்தனர். டீ கடை விஜயம்1/5 டீ கடை விஜயம் பின்னர் தம்முடைய நமக்கு நாமே பாணியில் டீ கடைக்கு சென்று அமர்ந்து வேட்பாளர்களுடன் ஹாயா ஒரு டீ சாப்பிட்டு கொண்டே வாக்கு சேகரித்தார்.


 அதேபோல் ஷேர் ஆட்டோக்களில் பயணித்தவர்களிடமும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 
ஆரத்தழுவிய பெரியவர்கள்
 
சில இஸ்லாமிய பெரியவர்கள் ஸ்டாலினை ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்தினர். ஸ்டாலினின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திமுக வேட்பாளர்கள் ரொம்பவே திணறித்தான் போனார்கள்.

அதிர்ச்சியான ஸ்டாலின்

 இதன் பின்னர் பொதுக்கூட்ட மேடை ஏறிய ஸ்டாலினை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் திமுக தொண்டர் ஒருவர் மிக உயரமான மரத்தில் ஏறி பிரமாண்ட திமுக கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஸ்டாலின், அந்த தோழருக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவியுங்கள்.. நீங்களும் உடனே கீழே இறங்கி வந்துவிடுங்கள்; அப்போதுதான் நான் பேசத் தொடங்குவேன் என்று கூறினார். பின்னர் அந்த தொண்டரும் கீழே இறங்கிவிட்டார்.

 ஜெ.க்கு பதிலடி இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையே இல்லையே என ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருக்கிறார். மதுவிலக்கு சட்டம் கொண்டுவருவோம் என்றாலே பூரண மதுவிலக்கு என்றுதான் அர்த்தம் என பதிலளித்தார்.


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-