அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சென்னை: நோட்டா ஓட்டு 35 சதவீதத்திற்கு மேல் பதிவானால் மறு தேர்தல் நடத்தப்படும் என்று வாட்ஸ்அப்பில் சில நாட்களாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதுபோன்று தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதில், \\”இப்போ இருக்கிற எந்த கட்சிக்கும் ஓட்டுபோட விருப்பம் இல்லாவிட்டால், நோட்டா (49ஓ)க்கு ஓட்டு போடுங்கள். நோட்டாவுக்கு போட்டால் என்ன பிரயோஜனம் என்று கேட்கிறீர்களா? சட்டமன்ற தேர்தலில் 35 சதவீதத்துக்கும் மேல் நோட்டா ஓட்டு பதிவாகி இருந்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்.

நோட்டாவுக்கு 35 சதவீதத்துக்கும் மேல் வாக்கு பதிவாகி இருந்தால் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது. தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது. 6 மாதம் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். பின்னர் மீண்டும் தேர்தல் நடைபெறும். அதில் புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்\\” என்ற தகவல் இடம் பெற்றுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, \\”இது தவறான தகவல் மற்றும் புரளி ஆகும். இதுபோன்று வாக்காளர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் தேவையில்லாமல் புரளிகளை வாட்ஸ்அப் மற்றும் சமூக இணையதளங்கள் மூலம் பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\\” என்றார்.

மேலும் தமிழக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, \\”நோட்டா வாக்கு என்பது, பொதுமக்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்காக பதிவு செய்யும் ஒரு பதிவு ஆகும். ஒருவேளை, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைவிட நோட்டா ஓட்டு அதிகமாக பதிவானால் கூட, அந்த தொகுதியில் நோட்டாவுக்கு அடுத்த இடத்தில் (2வது இடத்தை பிடிப்பவர்) இருப்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். மற்றபடி, தமிழகத்தில் 35 சதவீத வாக்கு நோட்டாவுக்கு விழுந்தால் தேர்தல் ரத்து, 6 மாதம் குடியரசு தலைவர் ஆட்சி, தற்போது தேர்தலில் நிற்பவர்கள் இனி தேர்தலில் நிற்க முடியாது, மீண்டும் 6 மாதத்தில் தேர்தல் என்பது போன்ற தகவல் அனைத்தும் தவறான தகவல் ஆகும்\\” என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-