அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,


பெரம்பலூரில் பெண் நீதிபதி வீட்டில் பூட்டை உடைத்து நகை–பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

பெண் நீதிபதி

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்துவருபவர் ஜெயந்தி.

இவர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள அபிராமபுரத்தில் செல்வம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகிறார்.

நீதிபதி ஜெயந்தி வீட்டை பூட்டிவிட்டு கடந்த 13–ந்தேதி கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனது பெற்றோரை பார்க்க சென்றுவிட்டார். இம்மாதம் 18–ந்தேதி மீண்டும் பணியில் சேருவதாக இருந்தார்.

பூட்டை உடைத்து கொள்ளை

நேற்று காலை நீதிபதியின் உதவியாளர் முருகேசன், ஜெயந்தியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைத்திருந்த நகை–பணம் திருட்டு போயிருந்தது. உடனே இதுகுறித்து நீதிபதிக்கு செல்போனில் அவர் தகவல் தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதி ஜெயந்தி வடலூரில் இருந்து பெரம்பலூருக்கு விரைந்து வந்து பார்த்தார்.

அப்போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15ஆயிரம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகைபிரிவு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். நீதிபதி வீட்டில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-