அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கார் மெக்கானிக் தான் படத்தில் உள்ள "முஹம்மத் ராஸ் மர்கானி" (Mohammad Raees Markani,) அவர்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற உந்துதல் இருந்து வர தண்ணீரில் கால்சியம் கார்பைடை கலந்து அதன் மூலம் உண்டாகும் அசிடிலைன் வாயு மூலமாக ஒரு வாகனத்தை உருவாக்கினால் என்ன ?என்று யோசித்துள்ளார். ஐந்தரை வருட கடுமையான முயற்சிக்கு பிறகு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தன்னுடைய மாருதி 800 காரை இந்த எரிபொருளுக்கு தகுந்தாற்போல் முழுவதுமாக மாற்றி அமைத்து மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவிற்கு உருவாக்கி காட்டியுள்ளார். கார் மிகச் சிறப்பாக செயல்பட்டும் உள்ளதாம்.

சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இவரின் கண்டுப்பிடிப்பின் மேல் ஆர்வம் கொண்டு இவரோடு இனைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தேசப்பற்று மிக்க முஹம்மது ராஸ் த‌ன் கண்டுப்பிடிப்பு இந்தியாவுக்குதான் பயன்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த கண்டுப்பிடிப்புக்கு அவர் காப்புரிமையை பெற்று விட்டார். இவரோடு இனைந்து செயலாற்ற‌ விரும்பும் நிறுவன‌ங்களுக்கு இவரின் ஒரே நிபந்தனை, அந்த காரை அவரின் சொந்த ஊரில் தான் உருவாக்க வேண்டும் என்பதுதான். என் ஊரில் இந்த காரை உற்பத்தி செய்வதன் மூலம் என்னால் பிறந்த ஊருக்கு பல விதங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்கிறார் முஹம்மது ராஸ் மர்கானி.

இந்த கார் தண்ணீரில் ஓடுவதோடு சுற்று சூழலுக்கு தீங்கு கொடுப்பதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொபைல் மூலமாக காரை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தையும் உருவாக்கி இதில் பொறுத்தியுள்ளார் முஹம்மத் ராஸ் மர்கானி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-