அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வேப்பந்தட்டை, ஏப்.7-பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதையொட்டி அப்பகுதியில் நுங்கு-தர்பூசணி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. நுங்கு விற்பனை அமோகம்பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்திற்காக வெளியே செல்பவர்கள், பணி நிமித்தமாக வெளியே சுற்றித்திரிபவர்கள் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். அதிலும் குறிப்பாக முதியவர்கள் ஆங்காங்கே நிழலில் இளைப்பாறிய பின்னரே தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர். அந்த சமயங்களில் தாகம் தணிப்பதற்காக அப்பகுதியில் விற்கப்படும் பதனீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக வேப்பந்தட்டையில் தள்ளுவண்டியில் நுங்குகள் மற்றும் பதனீரை ஏற்றிக்கொண்டு கடைவீதிகளிலும், தெருத்தெருவாகவும் சென்று விற்பனை செய்கின்றனர். ஒரு நுங்கு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வெயிலுக்கு இதமாக மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் வேப்பந்தட்டையில் நுங்கு, பதனீர், தர்பூசணி உள்ளிட்டவைகளின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க...பழஜூஸ் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணமாக தான் உள்ளது. காலை 8 மணிக்கே சுளீரென அடிக்கும் வெயிலானது படிப்படியாக அதிகரித்து மாலை வரை கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே நீர் மோர், பழ ஜுஸ்உள்ளிட்டவற்றை தயார் செய்து பாட்டிலில் அடைத்து வைத்து கொண்டே வெளியில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர். வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் குடையை பிடித்தபடியும், மாணவிகள் துப்பட்டாவால் முகத்தை மூடிய படியும் செல்கின்றனர்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-