அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூரில் சுதந்திர பொன்விழா நினைவுத்தூணை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொன்விழா நினைவு தூண்

இந்திய விடுதலை பொன்விழாவையொட்டி பெரம்பலூர் சங்குப்பேட்டையில் விடுதலை பொன்விழா நினைவு தூண் (ஸ்தூபி) ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. அப்போதைய கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் இருந்தபோது 2010-ம் ஆண்டில் சங்குப்பேட்டையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது சுதந்திர பொன்விழா நினைவு தூண் அங்கிருந்து அகற்றப்பட்டது.

விளம்பர பதாகை

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விடுதலை பொன்விழா நினைவு தூண் அமைக்கப்பட்டது. சுதந்திர பொன்விழா தூண் பொதுமக்கள் அதிகம் பார்வையிடும் பகுதியில் இருந்து மாற்றப்பட்டு தற்போது அதிகம் பார்வை படாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தற்போது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விளம்பர பதாகை பொன்விழா நினைவு தூணை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே நினைவுத் தூணை மறைக்கும் வகையில் விளம்பர பதாகையை அகற்ற கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

கோரிக்கை

இந்நிலையில் பலர் தங்களது இன்னுயிரை ஈந்து இந்திய விடுதலைக்காக பாடுபட்டதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்திய விடுதலை பொன்விழா நினைவுத்தூணை பொதுமக்கள் பார்வை அதிகம் படுமாறு உள்ள பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என்று ஓய்வூதியர்கள் சங்கத்தினர், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள பூங்காவில் உயரமான இடத்தில் ரவுண்டானா நடுவிலேயே இந்திய விடுதலை பொன்விழா நினைவு தூணை அமைத்து அதற்கு உரிய மரியாதை கிடைக்க வழிவகை செய்திடவேண்டும் என ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-