அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,: பெரம் பலூர் மாவட்டத்தில் வெப்பத்தை சமாளிக்க மக்கள் நொங்கை ஆவலுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். ஏப்ரல்,மே, ஜுன்மாதங்களில் காணப்படும் மிகக்கடுமையான வறட்சியைத் தாங் குவதற்கும்,வெயிலின் சூட்டைத் தணிக்கவும் விரும்புகிற பொதுமக்கள் ஐஸ்கிரீம், குளிர் பானங்களோடு, இளநீர்,வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நொங்கு, மோர் ஆகியவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு வெப்பத்தின் தாக்கத்தை ஓரளவுக்காவது சமாளிப்பார்கள். இந்நிலையில், பொதுமக்கள் பெரிதும் விரும்பக்கூடிய ரசாயனக் கலப்படமற்ற இயற் கையான உணவுப் பொருட்களுக்குதான் மவுசு கூடிவருகிறது.

இதில் சீசன்ஏதுமின்றி ஆண்டுதோறும் பரவலாக இளநீர் விற்கப்படும் நிலையில், சீசனுக்கு முன்பாகவே தர்பூசணியும், வெள்ளரிப்பிஞ்சும், வெள்ளரிப் பழங்களும் விற்ப னைக்குவந்து குவிக்கப்பட்டுவிட்டது. இளநீருக்கு இணையான நொங்கு மட்டும் ஏகோபித்த மக்களின் எதிர்பார்ப்பாகவே இருந்துவந்தது.தற்போது நொங்கும் பொதுமக்களின் எதிர்பார்பைப் பூர்த்திசெய்யும் விதமாக விற்பனைக்காக களமிறக்கப்பட்டுள்ளன. தாகத்தை தணிக்கவும், சூட்டை தணிக்கவும் நொங்கு பயன்பட்டாலும், வெப்பத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்குரு போன்ற உடல் பாதிப்புகளுக்கு உடலில் பூசிக்கொள்ளும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பனைமரங்கள் பராமரிப்பின்றி குறைந்துவிட்டபோதும், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், நெய்குப்பை, வி.களத்தூர், அயன்பேரையூர், ஒதி யம், வேப்பூர், கொளக்காநத்தம், பாடாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நொங்கு வெட்டப்படுகிறது.நொங்கிற்கான முழுமையானசீசன், தாமதமாகத் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 10 ரூபாய்க்கு 3 நொங்குகள் என கிராமங்களில் விற்கப்படுகிறது. அதனை ஆவலுடன் வரவேற்று பொதுமக்கள் வாங்கிச் சாப்பிட்டு வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-