அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: துபாயில் சர்வதேசமுதலீட்டாளர்கள் கண்காட்சி தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் மேக் இன் இந்தியா அரங்கம் திறக்கப்பட்டது.
அரங்கத்தை இந்தியாவின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் திறந்து வைத்ததார். இந்நிகழ்ச்சியில் அமீரக வெளிநாட்டு வர்த்தம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் அப்துல்லா அல் சாலே, அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி.சீத்தாராம், துணை தூதர அனுராக் பூஷன், இந்திய தொழிலதிபர்கள் எம்.ஏ.யூசுப் அலி, ஷெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய பிரதமர் மோடி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியா மற்றும் அமீரகம் உள்ளிட்ட இரு நாடுகளுடையே பயணம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இருநாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமீரக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அவரகளை ஈர்க்கும் வகையில் தற்போது துபாயில் மேக் இன் இந்தியா அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் 25பேர் கொண்ட குழுவினர் துபாய் வருகை தந்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகளை அமீரக தொழிலதிபர்களிடம் விளக்கி வருகின்றனர். இந்தியாவில் மருத்துவ சுற்றுலா, உள்கட்டமைப்பு, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், வேளான்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்திய அரசாங்கம் 25 துறைகளில் முதலிடுகள் செய்வதற்கு வேண்டிய அரசு முறை சம்பிரதாயங்களை எளிதாக்கியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-