அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நேபாள் நாட்டில் சர்வதேச அளவில் வால்வித்தை போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையை சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்ற மாணவர் பங்குப்பெற்று பாகிஸ்தான் மற்றும் நேபாள வீரர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

திருச்சி M.A.M பள்ளியில் பயிலும் இந்த மாணவர் இன்னும் சிலமாதங்களில் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு செல்லவிருக்கிறார்.

அவர் மேலும் பல்வேறு வெற்றிகளையும் சாதனையும் படைக்க பிரார்த்திப்போமாக...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-