அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் அருகே பேன் மருந்து குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28). இவரது மனைவி அமுதா (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் சர்மிதா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், அமுதா தலைக்கு பயன்படுத்துவதற்காக தரையில் வைத்திருந்த பேன் மருந்தை குழந்தை சர்மிதா சனிக்கிழமை குடித்துவிட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அந்த குழந்தை உயிரிழந்தது. புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தாய் திட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து சாவு: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கல்லம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகள் மாலதி (18). இவர், வேப்பூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரியில் பி.எஸ்.ஸி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை அவரது தாய் மணிமேகலை மாலதியைத் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாலதி விஷம் குடித்தார். இதையடுத்து, திட்டக்குடி மற்றும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து மணி அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-