அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...25-04-2015 அன்று பிலால் உசேன் என்ற சகோதரருக்கு திருமணம் நடைபெற்றது. வலங்கைமான் தில்லையாம்பூரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு சென்று சுமார் 120 பேர்களுடன் தங்களின் வலிமா என்ற திருமண விருந்தை தம்பதி சகிதமாக பகிர்ந்து கொண்டனர். மாப்பிள்ளை வீட்டார் செலவில் இந்த விருந்து நடைபெற்றது.

பெரும் பணக்காரர்களை மட்டுமே அழைத்து படாடோபமாக பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்கி நடக்கும் விருந்துகளை விட தேவையுடையோரை தேடிச் சென்று உணவு வழங்கும் இந்த செயல் உண்மையில் பாராட்டத்தக்கது. இஸ்லாம் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

நபி அவர்களின் காலத்துத் திருமண விருந்து மணமகன் வழங்கியதாகவே நடைமுறையில் இருந்துள்ளது. நபித் தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் திருமணம் முடித்தபோது ''ஓர் ஆட்டையாவது அறுத்து மண விருந்து அளியுங்கள்'' என்று நபி அவர்கள் கூறியதாக (புகாரி 5029, முஸ்லிம் 2790) ஆதாரப்பூர்வ அறிவிப்புகளில் காண்கிறோம்.

ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மண விருந்து கெட்ட உணவாகும். அழைப்பை ஏற்று விருந்துக்குச் செல்லாதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.

(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816)

http://suvanappiriyan.blogspot.com/2016/04/blog-post_65.html

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-