அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அரபு நாடுகளில் தற்போதைய கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியால் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது.இதனால் வேலைவாய்ப்புகளில் தேக்கநிலையும்,ஆட்குறைப்பு,புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்யின் விலை ஓரளவுக்கு உயரும்பொழுது மீண்டும் இயல்பு நிலை திரும்பும்.இருப்பினும் தற்போதுள்ள சூழ்நிலையால் அதிகம் பாதிக்கபடுவது, பாதிக்கப்படப்போவது இந்திய முஸ்லிம்களே.குறிப்பாக தமிழக,கேரள முஸ்லிம்கள்.

முன்பொருமுறை அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தேக்கநிலையை சந்தித்து மீண்டன என்பது நினைவிருக்கலாம்.முஸ்லிம்கள் நார்வே, டென்மார்க், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து,ஆஸ்திரியா இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் வேலைவாய்ப்புகளுக்கு ஏன் முயற்சிக்க கூடாது?

மேலும் உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பும்,பொருளாதார வளமிக்க நாடுகளான ஆஸ்திரேலியா,கனடா இவற்றில் வேலை வாய்ப்புடன் கூடிய குடியுரிமை கிடைக்கின்றன. நியூசிலாந்தும் பரவாயில்லை.இந்த நாடுகளுக்கு செல்வதற்கு சில ஆங்கில மொழி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்..சிங்கப்பூர் செல்லும் முஸ்லிம்களும் சில ஊர்களை சேர்ந்தவர்களை தவிர மிகக்குறைவே!

அரபுநாடுகளில் மட்டும் கவனம் செலுத்தும் நாம் மேற்கூறிய நாடுகளுக்கும் சென்று பொருளீட்டலாம் குடியரிமையுடன் கூட...இதற்கு நமக்கு முக்கிய தேவை ஆங்கில மொழியறிவுடன் கூடிய கல்வி! பட்டப்படிப்போ, தொழிற்கல்வியோ இதில் எது இருப்பினும் நன்று.

உலகின் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து,வெற்றி கண்ட ஈழத்தமிழர்களின் தற்போதைய வாழ்க்கை முறை நமக்கு சில தகவல்களை தரலாம்.விரல் விட்டு எண்ணக்கூடிய ஊர்களை சார்ந்த முஸ்லிம்களே மேற்கண்ட நாடுகளில் குடியுரிமையுடன் பணிபுரிகின்றனர்.அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கும் பயன்கிட்டும்...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-