அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தற்போது வி.களத்தூரில் பலருக்கு ஒரு போன் கால் வருகிறது. நான்  ரிசர்வ் வங்கியிலிருந்து பேசுகிறேன்! அல்லது நான் பேங்க் இருந்து பேசுகிறேன்      எனவும், உங்கள் A.T.M. கார்டு ரினீவல் செய்யனும்  எனவும் ,எனவே உங்கள் ATM கார்டில் உள்ள  14 நம்பரை கொடுத்தால் உடனே நான் ரினீவல் செய்து விடுவேன்.இல்லை என்றால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து 1000 அல்லது 2000 பிடித்து விடுவார்கள் என பலருக்கு போன் கால் தொடர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக நமது செய்தியாளர் நமதூர் IOB வங்கிமேலாளரை சந்தித்து கூறியபோது அந்தபோண் நம்பரை வாங்கி கொண்டு யாருக்கு போண்வந்தாலும் உங்கள் ATM கார்டு நம்பர் (அ) பாஸ்வேர்ட் சொல்லுங்கள் என்று கேட்டால் தயவுசெய்து கொடுக்காதீர்கள். நானே (போண் மூலமாக) கேட்டலும் நீங்கள் கொடுக்கதீர்கள் .
இதுவரை 2 பேர் இடம் இதுபோல தகவல் வாங்கி 10000 எடுத்து விட்டதாக வி.களத்தூர் I.O.B. வங்கி கிளை மேலாளர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் உங்கள் ATM கார்டை உங்கள் வீட்டு சிறுவர் சிறுமி இடம் கொடுத்து பணம் எடுத்து வருமாறு கொடுக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.


   
சிலர்அறியாமல் கொடுத்துவிட்டு தங்கள் கணக்கில் பணம் பரிபோய்விட்டதாக கூறுகிறார்கள்.

ஆகையால் எல்லோறையும் எச்சரிக்கையாக இருக்கசொல்லுங்கள் என்றுவேண்டுகோள் விடுத்தார் இதற்க்கு என்னதீர்வு என்றபோது இதுகுறித்து மேல்அதிகாரிகளுக்கு தகவல்அளிக்கபட்டு இருக்கிறது

அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

நம்ம பணத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்றசிந்தனையுடன் அங்கிருந்து கிழம்பினோம்.

நூதனகொள்ளையர்கள் அதிகரித்துவருகிறார்கள்

கவனமாக இருங்கள்

கவனமாக இருங்கள்....!


அன்புள்ள வி.களத்தூர் பகுதி மக்களே நமது வலைதளத்தை பெண்கள் பார்ப்பது மிகவும் குறைவு.எனவே நீங்கள் படித்தவுடன் இந்த செய்தியை உங்கள் வீட்டு பெண்களிடம் மேற்கண்ட விபரங்களை உடனே அலைபேசி வழியாக தெரிய படுத்தும் படி கேட்டு கொள்கிறேன்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-