அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மதுரை: மதுரையை சேர்ந்த 8ம் வகுப்பு பள்ளி மாணவி சரமாரி கேள்விகளுடன் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் அனுப்பி உள்ளார்.
மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வினு மகள் சைதன்யா. மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயாவில் 8ம் வகுப்பு மாணவி. சமீபத்தில் இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு பிரதமரிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து மாணவி சைதன்யா கூறும்போது, ‘‘இந்தியாவின் நிலையை உயர்த்த சில ஐடியாக்கள் கொடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினேன். பள்ளியில் முன்பு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டது.

வெளிநாடு செல்வோருக்கு பயனளிக்கும் இந்த மொழியை திரும்பக் கற்பிக்க உத்தரவிட வேண்டினேன். இந்தியாவோ, பாகிஸ்தானோ இருதரப்பு மக்களிடமும் வெறுப்புணர்வு வளர்ப்பதற்கான சூழலை மக்கள் மனங்களில் இருந்து களைவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டினேன். இந்திய எல்லையில் இருக்கிற வீரர், ஹரியானாவில் இருக்கிற ஒரு குடும்பத்தலைவி இருவருக்குமான பாதுகாப்பின்மை குறித்து கவலைப்பட்டிருந்தேன்.

உள்ளூர் வாய்ப்புகளை விட்டுவிட்டு, இளைஞர்கள் வெளிநாடு போகும் ஆவலில் இருப்பது ஏன்? என்றும் வினா எழுப்பி இருந்தேன். இந்த கடிதத்திற்கு பிரதமர் மோடியிடமிருந்து எனக்கு கடிதம் வந்திருக்கிறது. இந்த பகிர்வு மகிழ்ச்சியளிப்பதாக கையெழுத்திட்டு ஆங்கிலம், ஹிந்தி இரு மொழிகளிலும் பதில் அனுப்பி இருக்கிறார். மதுரையில் இருந்து ஒரு மாணவியாக, என் உணர்வை இந்திய பிரதமரிடம் பதிவு செய்திருப்பது மகிழ்வளிக்கிறது. எனது கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவது முக்கியம்’’ என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-