அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்,


இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஆடுகளை ஏற்றிவந்த கப்பல் கவிழ்ந்ததில் 800–க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது. இந்த சம்பவத்தில் கப்பல் ஊழியர்கள் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.1,200 ஆடுகள்

இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஆடுகள் இறைச்சிக்காக கப்பலில் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த கப்பல் இந்தியாவில் இருந்து 1,200 ஆடுகளை ஏற்றிக் கொண்டு துபாய் நோக்கி வந்து கொண்டிருந்தது. துபாய் பால்ம் தேரா பகுதியில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கப்பலின் பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக சாய்வதை ஊழியர்கள் உணர்ந்தனர்.

இதுகுறித்து கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விரைந்து செயல்பட்டு கப்பலில் இருந்து 12 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். ஆடுகளில் பெரும்பாலானாவை கடலில் மூழ்கியதில் சுமார் 150 ஆடுகள் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளன. இதில் 800–க்கும் மேற்பட்ட ஆடுகள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக அளவில் எடை ஏற்றி வந்துள்ளதால் கப்பல் கவிழ்ந்ததா, அல்லது கப்பல் கவிழ்வதற்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளனவா, என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து துபாய் மாநகராட்சியின் கழிவு மேலாண்மை பிரிவு இயக்குனர் அப்துல் மஜீத் சிபாய் கூறும்போது, ‘‘இந்தியாவில் இருந்து துபாய்க்கு கப்பலில் கொண்டு வரப்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக நீண்டதூரம் வந்த கப்பல் துபாயில் வந்து கவிழ்ந்துள்ளது பெரும் துயரமானது. உயிரிழந்த ஆடுகளை மீட்டு சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் புதைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்றார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-