அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
ஏப்ரல் 22:2016
குவைத்தில் கேலக்ஸி என்ற ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 80-க்கும் அதிகமாக இளைஞர்களிடம் பணம் மோசடி செய்த அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் சென்னை தாம்பரத்தில் கோல்டன் டிராவல்ஸ் நடத்திவரும் சலீம்&ராஜசேகர் போலி VISA ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
அதே சமயம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இன்று காலை 11 மணியளவில் கமிஷனர் அலுவலத்தில் நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தும் அந்த நிறுவனத்தினரை இது வரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கருப்பு எழுத்துக் கழகத்தை நாடிவந்துள்ளதால் கருப்பு எழுத்துக் கழகம் தலைமையில் இன்று காலை 11-மணியளவில் கமிஷனர் அலுவலகம் முற்றுக்கையிட உள்ளனர். பணத்தை பறிகொடுத்த இளைஞர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள உங்களுக்கு இது பற்றி எதாவது
கூடுதல் தகவல் தெரிந்தால் Comments ஆகவோ அல்லது இந்த எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிவித்து இவர்களுக்கு உதவுங்கள்
Contact :+91 9944742273
News Reporting by: கருப்பு எழுத்துக் கழகம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-