அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய் : சார்ஜாவின் ஊடக கார்ப்பரேசன் சார்பில் சிறந்த  இளம் திறமையாளர்களை கண்டறியும் வகையில்  போட்டி நடைபெற்றது. இதில் அரபி மொழி பாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீனாட்சி முதலிடம் பெற்று பட்டம் வென்றார்.


இதில் பங்கேற்க 450பேர் விண்ணபித்து இருந்தனர். இவர்களில் இறுதி போட்டிக்கு இந்திய மாணவி உள்பட‌ 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இறுதி போட்டியில்  பங்கேற்ற‌ யுஏஇல் வசிக்கும் இந்தியாவின் கேரள மாநில அங்கமலியை சேர்ந்த மீனாட்சி ஜெயக்குமார் முதலிடம் பெற்றார். இதன் மூலம் (Singer of Sharjah)  என்ற சார்ஜாவின் சிறந்த பாடகிக்கான பட்டத்தை வென்றார்.

தொலைகாட்சியிலும் ஒளிபரப்பட்ட இந்நிகழ்ச்சியில்   இவர் பாடிய இன்ஷா அல்லா என்ற‌ பாடல் பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களை வெகுவாக கவர்ந்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-