அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 பாடாலூர் அருகே கார்–அரசு பஸ் மீது மோதியதில் 6 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும் கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.

கார்–பஸ் மோதல்

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் சிவகுருநாதன் (வயது27). இவருடைய மனைவி அகிலா (21). இவர்களுக்கு மதுமித்ரன் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் ஒரு காரில் திட்டக்குடி பகுதியில் உள்ள அகிலாவின் தாய் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை சிவக்குமார் ஓட்டி வந்தார். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே ஆலத்தூர்கேட் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது காரின் வலது பக்க டயர் திடீரென வெடித்ததில், கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடியது. அப்போது திருச்சியில் இருந்து கடலூரை நோக்கி சென்ற அரசு பஸ், கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சிவகுருநாதன், அகிலா, மதுமித்ரன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

6 மாத குழந்தை பலி

இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மதுமித்ரன் பரிதாபமாக இறந்தது. படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-