அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவுதி அரேபியாவில் சம்பளம், சாப்பாடு இல்லாமல் கொத்தடிமை யாகத் தவிக்கும் தமிழக மீனவர் கள் 62 பேரும் தங்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட் டங்களைச் சேர்ந்த 62 மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்றனர். அவர்கள் சவுதியில் கொத்தடிமைபோல் நடத் தப்படுவதாக கூறப்படுகிறது. பாஸ் போர்ட், விசா ஆகியவற்றை சவுதி நிறுவனம் பறித்து வைத்துக் கொண்டதால் அவர்களால் இந்தியாவுக்கு திரும்ப முடிய வில்லை.

இந்நிலையில் கடந்த 6 மாதங் களாக அவர்களுக்கு சம்பளம் வழங் கப்படவில்லை என்றும், உணவு வழங்காமலும், அறையை விட்டு வெளியே எங்கேயும் செல்ல விடாமலும் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் சவுதியில் கொத்தடிமையாக உள்ள தமிழக மீனவர்கள் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சவுதியில் தவிக்கும் தமிழக மீனவர்கள் 62 பேரும் செல்போன் வீடியோ பதிவை வாட்ஸ் அப்பில் அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த வாட்ஸ்அப் வீடியோ பதி வில் ராமாநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பேசி யது: சவுதியில் 5 மாவட்ட மீனவர் கள் இருக்கிறோம். எங்கள் உரிமை யாளர் எங்களுக்கு 6 மாதமாக சம்பளம் தரவில்லை. பங்கு பணம் தரவில்லை. 3 சீசன் முடிந்த பிறகு தான் ஊருக்கு அனுப்புவதாக அவர் கூறினார். ஆனால் 3 சீசன் கள் முடிந்தும் ஊருக்கு அனுப்ப வில்லை. ஊரில் எங்கள் குடும்பத் தினர் கஷ்டப்படுகின்றனர். நாங் களும் சாப்பாடு, செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.

திரும்ப பணம் கேட்டபோது ‘தர முடியாது, ஊருக்கும் அனுப்ப முடியாது. வேண்டுமானால் நீதி மன்றம் செல்லுங்கள். இந்திய தூதரகத்துக்கு போ. என் கையில் துப்பாக்கி இருந்தால் சுட்டுக் கொன்றுவிடுவேன்’ என மிரட்டு கிறார். எனவே ராமநாதபுரம் ஆட்சியர் மேலிடத்துக்குத் தெரி வித்து எங்களை தாயகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மற்றொரு மீனவர் பேசும்போது, ‘நான் சவுதிக்கு வந்து 7 மாதங்கள் ஆகிறது. இங்கு வந்த பிறகு என் தாய் இறந்துவிட்டார். ஊருக்கு அனுப்ப கேட்டதுக்கு விட மறுத்து விட்டார்கள். ஊருக்கு அனுப்ப முடியாது என சொல்லிட்டாங்க. முடிஞ்சளவு போராடி பார்த்துட் டேன்’ என்றார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மற் றொரு மீனவர், ‘சவுதியில் ராம நாதபுரத்தைச் சேர்ந்த 45 மீனவர் கள் உள்ளனர். தொழிலுக்கு செல்ல வில்லை. வீட்டில்தான் அடைந்து கிடக்கிறோம். கணக்கு பார்த்து காசு கேட்டதற்கு திட்டி அனுப்பி விட்டனர். பாஸ்போர்ட், விசாவை திரும்ப வாங்கித்தந்து எங்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

இந்நிலையில் 62 மீனவர்களையும் மீட்கக்கோரி, அவர்களில் ஒருவரான சேதுராஜா (43) என்பவரின் உறவினர் திருமுருகன் உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தமிழகத்தைச் சேர்ந்த 62 மீனவர்களும் சவுதியைச் சேர்ந்த யூசுப் கலீல் என்பவரிடம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர் மீனவர்களின் பாஸ்போர்ட், விசா மற்றும் உடைமைகளை பறித்து வைத்துக்கொண்டார். அவர்களை மீன்பிடித் தொழிலைவிட்டு வேறு எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிப்பதில்லை. சம்பளமும் தரவில்லை. அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மத்திய வெளியுறவுத்துறை செயலர், வெளிநாடுவாழ் இந்தியர் நலத் துறை செயலர், தமிழக மீன்வளத் துறை செயலர், ராமநாதபுரம் ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் ஏப். 13-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-