அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



 
குன்னம் பஸ் நிலையம் அருகே நடந்த வாகன சோதனையில் தொழில் அதிபரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.6 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

தமிழகத்தில் வருகிற மே மாதம் 16-ந் தேதி சட்டமன்றதேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்திலும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வாக்காளர்களுக்கு வினி யோகிக்க யாரேனும் பணம் மற்றும் பரிசு பொருட்களை கொண்டு செல்கின்றனரா? என்பதை கண்டறிய இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமாரி தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குன்னம் பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ரூ.6 லட்சம் பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.6 லட்சம் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான அக்பர் ஷெரிப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் ரூ.6 லட்சத்திற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-