அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்ட 2015-16-ம் ஆண்டுக்கான குடும்பநலம் குறித்த தேசிய சர்வேயில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மாநிலம் மொத்தம் மக்கள் தொகயைில் மதுப்பழக்கம் உள்ள ஆண்களின் எண்ணிக்கையில் தமிழகத்திற்கு 6-வது இடமும், கடந்த 10 ஆண்டுகளில் புகையிலை பழக்கத்தை கைவிட முயன்ற பெண்களின் எண்ணிக்கையில் தமிழகத்திற்கு 2-வது இடமும் கிடைத்துள்ளது. இந்த சர்வே முடிவின் படி புகையிலை மற்றும் மதுப்பழக்கம், அதிகம் உள்ள மக்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் வடகிழக்கு மாநிலங்கள் முன்னிலை விகிக்கின்றன.

திரிபுரா, தெலுங்கானா, மணிப்பூர், அந்தமான் நிக்கோபார், சிக்கிம் போன்ற மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களிடம் மதுப்பழக்கம் உள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதற்கடுத்து 6-வது இடத்தில் தமிழகம் உள்ளதாகவும், இதில் 46.7 சதவீதம் ஆண்கள் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எனவும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெண்களை பொறுத்தவரையிலும் வடகிழக்கு மாநிலங்களும், தெலுங்கானா மாநிலங்களும் தான் முந்தி செல்கின்றன. 23 சதவீத சிக்கிம் பெண்கள் மது அருந்த, 2-ம் நிலையில் உள்ள தெலுங்கானாவில் கிராமப்புற பெண்கைளே 14 சதவீத்திற்கும் அதிகமானவர்கள். நகர்புறங்களில் 3 சதவீதத்திற்கும் சற்றே குறைந்த எண்ணிக்கை கொண்ட பெண்களும் மது அருந்துவதாக தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 200 நகர பெண்களில் ஒருவரும், 300 கிராமப்புற பெண்களில் ஒருவரும் மது அருந்துபவர்கள் என தெரிகிறது.

ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் இந்த விவரம் தலைகீழாக உள்ளது. அங்கே ஆயிரத்தில் ஒரு நகர்ப்புற பெண் மது அருந்த, கிராமப்புறங்களில் 6 பேர் வரை சாராயத்தை விரும்புவர்கள் உள்ளனர் என்று அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுப்பிரியைகளை பொறுத்தவரை தேசிய அளவில் தமிழகத்திற்கு 13-வது இடம் கிடைத்துள்ளது. முன்னர் பிரெஞ்ச் ஆட்சியில் இருந்த புதுச்சேரி தமிழகத்துக்கு அருகில் 12-வது இடத்தில் உள்ளது. ஆண், பெண் என இரு தரப்பிலும் பீகார், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், அரியானா, போன்ற மாநிலங்கள் தமிழகத்தை விட குறைந்த எண்ணிக்கை மதுபிரியர்களை கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-