அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஓமன் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த நான்கு இந்தியர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஸ்கட்:

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அந்த குடும்பத்தினர், இங்குள்ள ரஸ்டக் என்ற சுற்றுலாத்தலத்தை பார்வையிட்ட பின்னர், மஸ்கட் நகரில் உள்ள தங்களது வீட்டை நோக்கி நேற்று ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அல் குவைர் பகுதியில் உள்ள பாலம் வழியாக வந்தபோது, பாலத்தின் ஓரத்தில் இருந்த கம்பத்தின்மீது அவர்களின் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த குடும்பத் தலைவர், அவரது மனைவி, மகன் மற்றும் ஒரு முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்த தம்பதியரின் மூத்த மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மஸ்கட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-