அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உரிய ஆவணங்களின்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.5 லட்சத்தை பறக்கும் படை அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர், குன்னம் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் தொகுதிக்குள்பட்ட வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் பிரிவு சாலை அருகே பறக்கும் படை அலுவலரும், வட்டாட்சியருமான மருதை வீரன் தலைமையிலான பறக்கும் படையினர் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெரம்பலூர் ரெங்கா நகரைச் சேர்ந்த அப்துல் பாரி என்பவரின் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டதில், ரூ. 4.5 லட்சம் இருப்பது தெரிய வந்தது. ரொக்கத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருவாய்க் கோட்டாட்சியர் ரா. பேபியிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-