அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.காங்கிரசுக்கு 41 தொகுதிகள்

இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதி பங்கீடு குழுவினரை, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுவினர் ஏற்கனவே சந்தித்து பேசினார்கள்.பட்டியல் வெளியீடு

இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கையெழுத்திட்டு உள்ளனர். பின்னர் அந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் விவரம் வருமாறு:–மயிலாப்பூர்

1.ராயபுரம்

2.மயிலாப்பூர்

3.மதுரவாயல்

4.அம்பத்தூர்

5.ஸ்ரீபெரும்புதூர் (தனி)

6.திருத்தணி

7.ஆற்காடு

8.ஓசூர்

9.கலசப்பாக்கம்

10.செய்யாறுகோவை (தெற்கு)

11.ஆத்தூர் (தனி)

12.சங்ககிரி

13.நாமக்கல்

14.கோபிசெட்டிபாளையம்

15.ஊட்டி

16.காங்கயம்

17.தாராபுரம் (தனி)

18.சூலூர்

19.கோவை (தெற்கு)

20.வேடசந்தூர்

21.கரூர்பாபநாசம்

22.திருச்சி (கிழக்கு)

23.முசிறி

24.ஜெயங்கொண்டம்

25.காட்டுமன்னார்கோவில் (தனி)

26.வேதாரண்யம்

27.நன்னிலம்

28.பாபநாசம்

29.பட்டுக்கோட்டை

30.அறந்தாங்கி

31.காரைக்குடி

32.மதுரை (வடக்கு)

33.திருமங்கலம்

34.சிவகாசிதென்காசி

35.முதுகுளத்தூர்

36.ஸ்ரீவைகுண்டம்

37.தென்காசி

38.நாங்குநேரி

39.குளச்சல்

40.விளவங்கோடு

41.கிள்ளியூர்வேட்பாளர் பட்டியல்

சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘காங்கிரசுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு மாவட்டத்தை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. வரும் தேர்தலில் தி.மு.க.மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். காங்கிரசுக்கான வேட்பாளர் பட்டியலை மூன்று அல்லது 4 நாட்களில் அறிவிப்போம்’’ என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவ படை ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் என்னென்ன? என்பது இன்று(வெள்ளிக்கிழமை) தெரியவரும்.நேரடி போட்டி

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 இடங்களில், 40 இடங்களில் அ.தி.மு.க.வுடன் நேரடி மோதலில் ஈடுபடுகிறது. காங்கயம் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க.கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் உ.தனியரசுவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் களம் இறங்க இருக்கிறார்.


கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
15
பிரதி
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-