அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள சவூதி அரசின் நடவடிக்கையை பிரித்தானியா தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சவூதி அரேபியாவில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தலையை துண்டித்து மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 82 குற்றவாளிகளுக்கு சவூதியின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியுமுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மரண தண்டனை வழங்கப்படும் எண்ணிக்கையை அதிகரிக்க சவூதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மனிதஉரிமைகள் அமைப்பு இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானியா அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதுள்ள நிலை நீடித்தால் ஆண்டு இறுதியில் சவூதி அரேபியா 320க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் வாய்ப்பிருப்பதாக கருதப் படுகிறது.

இது கடந்த 2015ஆம் ஆண்டை விட வும் இருமடங்கு என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 158 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு அது 88 என்ற எண்ணிக்கையிலேயே இருந் துள்ளது. இதனை நண்பர்களுடன் பகிரவும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-