அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...









திருநெல்வேலி

திருநெல்வேலி அல்வா உலக புகழ் பெற்றது. அதனை பயன்படுத்தி ஒரே பிராண்டில் பலர் வியாபாரம் செய்வதை கண் கூடாக பார்க்க முடியும். திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் அல்வாவுக்கு பிரசித்திபெற்ற கடையான சாந்தி ஸ்வீட்ஸ் என்கிற பெயரில், புதிய பேருந்து நிலையத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கடைகள். பெயரில் சிறிய மாற்றம் இருக்கும். நியூ சாந்தி, புது சாந்தி, புதிய சாந்தி, ஶ்ரீசாந்தி என்கிற பெயரில் கடைகளை பார்க்கலாம். கடைகள் இப்படி என்றால் ரயில், பஸ்களில் நம்மை தேடி வந்து அல்வா விற்பவர்கள், ஒரிஜினல் இருட்டுக் கடை அல்லா என்று விற்று விடுகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் அல்வா பாக்கெட் கவரில் பெயர் எதுவும் இருக்காது. கிட்டத்தட்ட இருட்டுக் கடை அல்வா கடையில் வாங்கும் போது எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும, சுவையை தவிர. எனவே, சுற்றுலாவாசிகளே உஷார். இப்படிப்பட்ட அல்வாவை நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வாங்கி சென்று கொடுத்தால் உங்களுக்கு 'சிறந்த அல்வா கொடுத்தவர்' என்கிற பட்டம் கிடைக்க கூடும்.



புதுச்சேரி

வெளியூர்காரர்கள், வெளிநாட்டுக்காரர்களை இங்குள்ள ஆட்டோக்காரர்கள் அதிகம் ஏமாற்றுகிறார்கள். பஸ் நிலையத்திலிருந்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றால் 5 ரூபாய்தான். ஆட்டோவுக்கு வெளியூர்காரர்களிடம் 200 ரூபாய் கேட்பார்கள். வெளிநாட்டுக்காரர்களிடம் 350 முதல் 400 ரூபாய் கேட்பார்கள். அடுத்ததாக வாரக் கடைசியில், ஓட்டல்களில் அறை வாடகை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துவிடும். 500, 1000 ரூபாய் வாடகை என்பது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2000, 5000 என அதிகரித்து விடும். இதற்கு என தனியே டாரிஃப் அட்டை மற்றும் பில் புக் வைத்திருக்கிறார்களாம். ஆன்லைனில் ரிசார்ட்கள் புக் பண்ணும்போது என்னென்ன வசதி இருக்கிறது என்று முழுமையாக படித்துவிட்டு புக் பண்ண வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் ஏகப்பட்ட விஷயங்களை சொல்லி காசு கறந்துவிடுவார்கள்.



ஒகேனக்கல்

இங்கே மசாஜ் செய்ய எண்ணெய் பாட்டிலுடன் பலரும் வலம் வந்து கொண்டிருப்பார்கள். எண்ணெய் மசாஜ் செய்தால் உடலில் உள்ள நோய் எல்லாம் போய்விடும் என்று ஆசை வார்த்தை காட்டுவார்கள். எண்ணெய் மசாஜ்க்கு அதிகபட்சம் என்றால் 150, 200 ரூபாய் கொடுக்கலாம். 500, 1000 ரூபாய் கூட வசூலிப்பது நடக்கிறது. எனவே, பேரம் பேசுங்கள். அவர்களாகவே இறங்கி வருவார்கள். அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். படகு சவாரி செய்யும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்களுக்கு யாருமே பார்க்காத இடம் காட்டுகிறேன் என அழைத்துபோய், யாருமற்ற இடத்தில் வைத்து பணத்தையெல்லாம் பிடுங்கிவிட்டு, விரட்டி விட்டுவிடுவார்கள் ஜாக்கிரதை.



முக்கொம்பு

திருச்சி மாவட்டம், கல்லணை முக்கொம்பு செல்லும் தம்பதிகள் / இளம் ஆண், பெண் தனியாக போனால், அங்கு அவர்களை மிரட்டி காசு பறிக்கும் கும்பல் சுற்றுவதாக பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இப்போதும்கூட பல நேரங்களில் தம்பதிகள் தனியாக போக முடியாத நிலை இருக்கிறது. எனவே உஷாரக இருக்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-