அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



 பெரம்பலூர் அருகே தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில் தொண்டுநிறுவன ஊழியர் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ2,69,970 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்றத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்புக் குழுவினர் தொடர் சோதனையில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணம் தருவதற்காக, அரசியல்வாதிகள் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக இதுபோன்ற வாகனத்தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தேர்தல் விதிகளின்படி ரூ50 ஆயிரத்திற்குமேல் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில்,நேற்று பறக்கும்படைஅதிகாரி ராஜேஸ்வரன் தலைமையில், எஸ்ஐ ரவிச்சந்திரன், ஏட்டு முத்துக்குமார், காவலர் கீதா உள்ளிட்டோர் செட்டிக்குளத்திலி ருந்து ஆலத்தூர்கேட் செல்லும் சாலையில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண் டிருந்தனர். அப்போது அவ்வழியே திருச்சிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்த நபரை வழிமறித்துச் சோதனையிட்டனர். அதில் திருச்சி தொண்டு நிறுவன ஊழியரான லாடபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்(26)என்பவர், தனதுபைக்கில் வைத்திருந்த ரூ2,69, 970 ரொக்கப்பணத்தை வாங்கி, பணம் எங்கு, எதற்காகக் கொண்டுசெல்லப் படுகிறது எனக் கேள்வி எழுப்பினர்.

அந்தப் பணத்திற்கான உரியஆவணங்களை பறக்கும்படை அலுவலர்களிடம் ரமேஷ் காட்டாத காரணத்தால் அந்தப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டபணம் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும்அலுவல ரான வருவாய்கோட்டாட்சியர் பேபியிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அது பெரம்பலூர் சார் நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-