அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)


வி.களத்தூர் சங்கமம் 2016  துபை முஸ்ரிப் பூங்காவில் மிக     
பிரமாண்டமாக நடைப்பெற்றது!
காலை 8:15  மணிமுதல் 9 மணி வரை தேரா பழைய தமிழ் ரெஸ்டரண்ட்லிருந்து முஸ்ரிப் பூங்காவுக்கு நமதூர் மக்களை சிறப்பு வேன் மூலம் அழைத்து சென்றனர்.

முஸ்ரிப் பூங்காவிற்கு செற்ற நமதூர் வாசிகளை விழாகுழுவினர் இனிய முகத்துடன் வரவேற்றனர்.வந்தவர்கள் அனைவருக்கும் ஜுஸ் மற்றும்  சன்ட்  வீச், 
தண்ணீர் கொடுத்து உபசரித்தனர்.

நமதூர் மக்கள் நன்பர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த வருட சங்கமம் நிகழ்ச்சிக்கு N.P.அலிராஜா,A.சேட் ஷர்புதீன்,H.சர்புதின்,S.அபு சாலிஹ் ஆகியோருடன் A.அப்துல் சலாம்,மற்றும் B.அஹம்மது அலி முன்னிலை வகித்தனர்.
குறிப்பாக இந்த 6 பேரும் கடந்த இரண்டு    மாதங்களாக அமீரகத்தில்  பல்வேறு பகுதியில்  வகிக்கும்  வி.களத்தூர் மக்களை சந்தித்து நமது ஊர் மக்களிடம் பொருளாதார உதவி, மற்றும் ஆதரவை பெற்று நமது ஊர் மக்கள் சந்தோசத்திற்காக  இவர்கள் பல சிரமங்கள் எடுத்துள்ளனர். 

காலை 9:45 மணிக்கு விளையாட்டு போட்டிகள் ஆரம்பம் ஆனது.இந்த விளையாட்டு போட்டி நடுவர்களாக A.அப்துல் சலாம்,  B.அஹம்மது அலி K.அப்துல் ஹக்கீம், A.ஷபியுல்லா,B.சாகுல் ஹமிது ,S.அபு@அக்பர் பாஷா,F.சாகுல் ஹமீது மற்றும் M.ஹிதாயத்துல்லா ஆகியோர் இருந்து சிறப்பாக நடத்தி முடித்தனர்.பொதுவாக கடந்த 3 வருட சங்கமம் விளையாட்டு போட்டியில்  நமது ஊர் மக்களுக்கு 
யாருக்காவது ஒருவருக்கு காயம் ஏற்படும்.ஆனால் இந்த வருட விளையாட்டு போட்டியில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் சிறப்பாக விளையாட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. 

இந்த வருடம் 6  விளையாடு போட்டிகள் நடைப்பெற்றது .
முதல் போட்டியாக கூடையில்  குண்டு எறிதல் போட்டி நடைப்பெற்றது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 10 குண்டுகள் தரபட்டன. இதை யார் சரியாக கூடைக்குக் போடுபவர்களுக்கு பரிசு .இதில் அதிக பட்சமாக 3மற்றும் 4 குண்டுகள் பலர் போட்டனர் . அவர்களுக்கு 2 வது சுற்று போட்டி வைத்து அதில் 3 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
பின் இரண்டாவது போட்டியாக ஸ்பூன் மூலம் கிளாசில் தண்ணீர் நிரப்புதல் போட்டி நடைப்பெற்றது .இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டாம் சுற்று மூலம் 3 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் 
கலர் பந்து எடுத்து ஓடுதல் போட்டி நடைப்பெற்றது .
4 வது போட்டி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தனியாக நடைப்பெற்றது .


பின் ஜூம்மாவுக்கு டைம் நெருங்கி விட்டது.அனைவரும் ஜூம்மா தொழுகை சென்னனர்.ஜூம்மா தொழுகை முடிந்த உடன் அனைவருக்கும் மதிய உணவாக பிரியானி வழங்கப்பட்டன.

பின் மதியம் 3 மணியளவில் 5 வது போட்டியாக இஸ்லாம் பொதுஅறிவு போட்டி நடைப்பெற்றது .இதில் நமதூர் மக்கள் அனைவருக்கும் 20 இஸ்லாமிய பொது அறிவு கேள்விக்கு சரியாக டிக் செய்தவர்களை தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
பின் 6 வது போட்டியாக முட்டிக்கு மேல் பந்து வைத்து ஓடுதல் போட்டி நடைப்பெற்றது .இதிலும் வெற்றி பெற்ற 20 பேர் இரண்டாம் சுற்று போட்டி நடைப்பெற்று இதில் 3 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .விளையாட்டு குழுவினர் சரியாக திட்டம் இட்டு குறித்த நேரத்தில் அனைத்து போட்டிகளும் சிறப்பாக நடத்தி முடித்தனர்.


இந்த சங்கமத்துக்கு சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டாதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.வி. களத்தூர் மக்கள் மட்டும் அல்லாமால் லப்பைகுடிகாடு,பெரம்பலூர்.அதிராம் பட்டினம் உள்பட பல வெளியூர் மக்களும் கலந்து கொண்டனர்.
போட்டியில்  வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டன .மேலும் அமீரகட்டில் 30ஆண்டுகள் பனி புரிந்த அனைவருக்கும் நினைவு பரிசு வழன்கி கெளரவிக்கப்பட்டது .
இந்த சங்கமத்தை வருட தோறும் நடத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருந்தது. 

இந்த சங்கமம் நிகழ்ச்சிக்கு  ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அண்பர்கள் அனைவருகளுக்கும் குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  

 வி.களத்தூர் மக்கள் பலர் வேண்டுக்கோள் இணங்க இன்ஷா அல்லாஹ் அடுத்த சங்கமம் 2017 மே முதல் வாரத்தில் நடைப்பெற வாய்ப்பு .

புகைப்படங்கள் அதிகமாக இருப்பதால்  கீழே கூடுதலாக இரண்டு பதிவு!
வி.களத்தூர் சங்கமம் 2016ல் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள்!

அமீரகத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்த வி,களத்தூர் மக்களுக்கு நினைவு பரிசு அளித்து கெளரவிப்பு !


.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-