அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

stalin election campagin begins tomorrow சென்னை: தி.மு.க., பொருளாளர்  தளபதி மு.க.ஸ்டாலின் நாளை முதல் வரும் 22 ஆம் தேதி வரை திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதற்கட்ட பிரசார பயணம் மேற்கொள்கிறார். தமிழக சட்டசபைக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். அதன்படி நாளை முதல் வரும் 22 ஆம் தேதி வரை முதற்கட்ட சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் ஸ்டாலின். 
ஸ்டாலின் முதற்கட்ட சுற்றுப் பயண விவரம்: 15.4.2016 - மதுரை 
16.4.2016- தேனி,
 திண்டுக்கல் (பொதுக் கூட்டம் தேனி நகரம்) 
17.4.2016 - திருப்பூர் 
18.4.2016 - கரூர், 
திருச்சி (பொதுக் கூட்டம் குளித்தலை)
 19.4.2016 - பெரம்பலூர், அரியலூர், கடலூர் (பொதுக் கூட்டம் - குன்னம்)
 20.4.2016 - விழுப்புரம் 21.4.2016 - விழுப்புரம் 22.4.2016 - காஞ்சிபுரம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-