அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஏப்,12:
வி.களத்தூரில் நடந்த வாகன தணிக்கையில் ஆவணமின்றி வேனில் எடுத்துச் சென்ற ரூ.1.64லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறி முதல் செய்தனர்.
தமிழக சட்ட மன்றப் பொதுத் தேர்தல் நடை பெற இருப்பதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணினிப்புக்குழுவினர் தொடர் சோதனையில், வாகனத்தணிக்கையில் ஈடு பட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணம் தருவதற்காக அரசியல் வாதிகள் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக இது போன்ற வாகனத் தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகி றது.
இதில் தேர்தல் விதிகளின் படி ரூ50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று பறக்கும் படை அதிகாரியான, ஆலத்தூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பன்னீர் செல்வம் வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.  

அப்போது அவ்வழியே சென்ற வேனை வழி மறித்து சோதனையிட்டதில், பிரபல மசாலாப் பொடி பாக்கெட்டுகளை இறக்குமதி செய்யும் வேனை ஓட்டிச் சென்ற அதன் டிரைவரான குரும்பலூர் பாளைத்தைச் சேர்ந்த ராம நாதன் என்பவர்,உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ1.64லட்சம் ரொக்கப் பணத்தைப் பறி முதல் செய்தனர்.
பறி முதல் செய்யப்பட்ட பணம் பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் பேபியிடம் ஒப்படைக்கப் பட்டு, பின்னர் அது பெரம்பலூர் சார் நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-