அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வெள்ளி, 2 ஏப்ரல் 2016

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில், அதிமுக 130 தொகுதிகளையும், திமுக 70 தொகுதிகளையும் பெறும் என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் மே 16 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில், அதிமுக 130 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 70 தொகுதிகளும், மற்றவர்கள் 34 தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறிப்பார்கள் என்று கணித்துள்ளது. இந்த தேர்தலில் தமிழக பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என அடித்துக் கூறியுள்ளது. ஆக மோடி மோகம் சில மாதங்களே என நிரூபணமாகியுள்ளது.  DMK gets more seats: News Nation Opinion poll


இந்நிலையில், நியூஸ் நேஷன் என்கிற மற்றொரு செய்தி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 10000 பேரிடம் நடத்திய ஆய்வு முடிவின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடைபெற்றதாக நியூஸ் நேஷன் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள் வரை கைப்பற்றும் என்று நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வரும் மே 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.


இந்த கருத்துக்கணிப்பு முடிவின்படி, திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 103 இடங்களிலிருந்து 107 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மக்கள் நலக் கூட்டணி 14 இடங்களிலிருந்து 18 இடங்கள் வரை பெறும் என்றும், மேலும் பாஜக ஒரு தொகுதி கூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

 DMK gets more seats: News Nation Opinion poll

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-