அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது32). இவர் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் பாலக்கரைபகுதியில் எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.


நேற்று மீண்டும் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. மேலும் அதே பகுதியில் கல்பாடி எறையூர் கிராமத்தை சேர்ந்த நடராஜ்(42) என்பவருக்கு சொந்தமான மரக்கடையின் (டிம்பர் மார்ட்) பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் லாக்கரை உடைத்து பார்த்துள்ளனர். பணம் இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்து அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளை சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.


அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் தடய அறிவியல் நிபணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-