அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி தனியார் நிறுவனங்களை
நம்பி அமீரகம் வந்து ஏமாற்றம் அடைந்த வாலிபர்களை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பிய இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.

வளைகுடா போன்ற நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியாவிலிருந்து ஜார்கண்ட், கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட வாலிபர்களை அமீரகத்தின் துபாய்க்கு ஒரு மாத விசிட் விசாவில் அழைத்து வந்துள்ளது இந்தியாவில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனம்.


விசா காலம் முடிவதற்குள் வேலை வாங்கி கொடுக்காமல் தாய்நாடு திரும்புவதற்கும் (விசிட் விசா காலக்கெடு முடிவதற்குள் ) வழி வகை ஏதும் செய்யாமல் கடந்த மூன்று மாத காலமாக வாலிபர்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு வேளை மட்டும் உணவு வழங்கி Al Quoz ல் உள்ள ஒரு ரூமில் அடைத்துள்ளனர். என்ன செய்வது என்று தெரியாது பல கஷ்டங்களையும் துன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்த வாலிபர்கள் பல நபர்களுக்கு, பல அமைப்புகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் யாரும் சரியான நடவடிக்கை எடுக்க முனையாததையடுத்து இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்மாநில அறிவுறுத்தலின் பேரில் துபை மண்டல நிர்வாகிகளின் கவனத்திற்கு வர பல்வேறு முயற்சிகள் எடுத்து வாலிபர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தாயகம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு 10 க்கும் மேற்பட்ட வாலிபர்களையும் 15/03/2016 அன்று துபாய் விமான நிலையத்தில் இந்தியன் கல்ச்சுரல் சொசயிட்டியின் துபை மண்டல நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர் கனி அவர்கள் இந்தியாவிற்கு வழியனுப்பி வைத்தனர்.மின்னஞ்சல் மூலமாக
SDPI LBK

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-