அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 69–வது நிறுவன தினமான மார்ச் 10–ந் தேதி (நேற்று), விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநில தலைவர் ஹைதர் அலி ஷிஹாப் தலைமை தாங்கினார். இலங்கை மந்திரி ரவூப் ஹக்கீம் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாலை 6.30 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் மாநாடு கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் சிறுபாண்மையினருக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதாக கூறினார்.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் எம்.பி., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் கட்சி நிர்வாகிகள், தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.அதிரை பிறை

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-