அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஐபோன் எஸ்.இ. இன்று அறிமுகம்: ஆப்பிளின் முதல் பட்ஜெட் ஸ்மார்ட் போனின் முழு விபரங்கள்.

 


inShare

சமூகத்தில் வேறுபாடு நிகழ்வது போல் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்கள் உயர்ந்த பிரிவாகவும் மற்ற தயாரிப்புகளை பயன்படுத்துபவர்கள் மற்றொரு பிரிவாகவும் கருதப்படுகிறார்கள். இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கும், தனித்தன்மைக்கும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

ஆனால் ஆப்பிளே எதிர்பார்க்காதவாறு ஸ்மோர்ட் போன் சந்தையானது பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது. முக்கியமாக இந்தியா, சீனாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. ஆனால் ஆப்பிள் போன் தரத்தில் அசத்தினாலும், விலை என்று வரும் போது சாதாரண மக்களால் வாங்க முடிவது இல்லை. இந்த குறையை சரி செய்யும் பொருட்டு ஐபோன் எஸ்.இ.(iPhone SE ) என்ற புதிய ஸ்மார்ட் போனை இன்று வெளியிடவுள்ளது.

ஐபோன் எஸ்.இ. 4 இன்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங்,1 ஜி.பி. ரேம், 12 மெகா பிக்சல் கேமரா, 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. சேமிப்பு ஆகிய வசதிகளை கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐபோன் எஸ்.இ. விலையானது ரூ.27,500 முதல் ரூ.34,500 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-