அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வாட்ஸ் அப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் புதிய வெர்சன் - v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும், v 2.12.14 ஆப்பிள் ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்குமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ் அப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸ் அப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில் வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஆவணங்களை யாருக்கு அனுப்புகிறமோ, அவரும் வாட்ஸ் அப் அப்டேட் செய்திருக்க வேண்டும்; அப்போதுதான் அவர் ஆவணங்களை பெற முடியும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-