அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


  


 இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிஎஸ்என்எல், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியன இணைந்து வேலை தேடும் இளைஞர்களுக்காக வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செல்லிடப்பேசி பழுது நீக்குதல், தொலைதொடர்பு கோபுரம் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

இதில், சேர விருப்பமுள்ளோர் http:rgmttc.bsnl.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044-22327383, 22321021 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) எம்.ராஜீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-