அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம்.

பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.

எளிமையான ஆங்கில உரையின் தமிழாக்கம் இதோ :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கு விரும்பவில்லையோ அவண் உண்மையான முஸ்லிம் அல்ல.

அல்லாஹ்வுக்கு அழகான பல பெயர்கள் உண்டு அதில் ஒன்றுதான் அர்ரஹீம் – மிக்க கருனையாளன்.

நபிகள் நாயகம் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அஸ்ஸலாமு அலைக்கும் எனக் கூறுவார்கள்.இதன் பொருள் , உங்கள் மீது அந்த இறைவனின் கருனை உண்டாகட்டும்.

இவ்வாறுதான் ஒரு முஸ்லிம் இறைவனது அன்பை மற்றவருக்கு வேண்டுவார்.
(உலக நாடுகளின் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்)

மேலும் முஹம்மத் நபி போர்க்களத்திலும் கூட எவ்வாறு மனிதநேயத்துடன் நடக்கவேண்டுமென தன் தோழர்களிடம் கூறுகையில்,
குழந்தைகளை , பெண்களை , வயதான முதியவர்களைக் கொலை செய்யக்கூடாது எனக் கூறியுள்ளார்கள்.மேலும் எதிரிகளின் வசம் உள்ள மதபோதகர்கள், மரங்கள் ,ஆலயங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தக்கூடாது எனக் கூறினார்கள்.

இவைதான் முஸ்லிம்களுக்கு மதரஸாக்களில்(அரபு பாடசாலை) போதிக்கப்படுகிறது.
(உலக நாடுகளின் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்)

இதுவே இஸ்லாமாகும்…

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-