அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சர்வதேச வர்த்தக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான யூகவ் நிறுவனம் துபாயில் உள்ள ஷாப்பிங் மால்களில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, சிறந்த வரவேற்பு, உணவகங்கள், அமைப்பு மற்றும் வடிவமைப்பு, பெரியவர்களுக்கான‌ பொழுதுபோக்கு, மற்றும் பார்க்கிங் ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கணக்கில் கொண்டு இந்த ஆன்லைன் சர்வே மூலம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி உலகின் மிகப்பெரிய மால்களில் ஒன்றான‌ துபாய் மால் சிறந்த ஷாப்பிங் மாலாக‌ முதலிடம் தரப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. அதேபோன்று மக்கள் அதிகமாக செல்லும் வணிக வளாகமாக தேரா சிட்டி சென்டரும் அதனை தொடர்ந்து துபாய் மால் மற்றும் மால் ஆப் எமிரேட்சும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதே போன்று பொது மக்கள் அதிகம் பரிந்துரைக்கும் வணிக வளாகங்களில் முதலிடத்தில் துபாய் மாலும், அதனை தொடர்ந்து சிட்டி சென்டரும் , மால் ஆப் எமிரேட்சும் தேர்வு செய்யப்பட்டது. சராசரியாக ஒருவர் மாதத்தில் 8 முறை மால்களுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வணிக வளாகங்களில் தி பீச்(ஜெபிஆர்), சிந்தகா சிட்டி சென்டர், சிட்டி வாக் ஆகியவை சிறந்த வணக வளாங்களாக தேர்வு செய்யப்பட்டது துபாய் மாலில்தான் உலகின் மிகபெரிய கண்ணாடி மீன் தொட்டி மற்றும் நீருக்கடியில் கடல்வாழ் உயிரன பூங்காவும் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-