அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், மார்ச்.7-பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும கலை விழா நடந்தது. இதில் திரைப்பட நட்சத்திரங்களுடன் சேர்ந்து மாணவ, மாணவிகள் அசத்தினார்கள். “நட்சத்திரா 2016”பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் சார்பில் நட்சத்திர இன்னிசை மற்றும் கலை விழா “நட்சத்திரா 2016”¢ என்ற பெயரில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் 2 நாட்கள் நடந்தது. விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ.சீனிவாசன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசும்போது, மாணவர்கள் கல்வியுடன் ஏதேனும் ஒரு கலையையும் கற்பது அவர்களது வாழ்வை இனிமையாக்கும். கலையில் தெய்வீகம் உள்ளது. அதை கலைவாணியின் கையில் உள்ள வீணை நமக்கு வலியுறுத்துகிறது. நமது வாழ்வில் மனதளவில் பிரச்சினைகள் ஏற்படும் போது மனதை சமநிலைப்படுத்த கலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். விழாவில் கல்வி நிறுவனங்களின் துணை தாளாளர் சீ.கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர். திரைப்பட நட்சத்திரங்கள்விழாவின் முதல் நாள் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட பின்னணி பாடகர்கள் கானாபாலா, ரஞ்சித் மற்றும் பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டு இன்னிசை விருந்து அளித்தனர். இரண்டாம்¢ நாளில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை ஹன்சிகா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் சேர்ந்து மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் அசத்தினர். நிகழ்ச்சியில் பேசிய ஜீவா, இது போன்ற ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியை பெருநகரங்களில் கூட கண்டதில்லை என்று கூறினார்.விழாவில் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் கே.இளங்கோவன் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் பி.கார்த்திகேயன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-