அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுதா (22). வண்ணாரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அறிவழகனுக்கும், சுதாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, நவனேஷ் (1) என்ற குழந்தை உள்ளது.

இந்நிலையில், தம்பதி இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, குழந்தையுடன் வி. களத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் சுதா வசித்து வந்தார். இதனிடையே, வெளிநாடு சென்றிருந்த அறிவழகன் கடந்த மாதம் சொந்த கிராமத்துக்கு வந்து, தன்னுடன் குடும்பம் நடத்த சுதாவை அழைத்தாராம்.

மறுப்பு தெரிவித்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சுதாவை, அவரது குழந்தையுடன் ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லையாம். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் வி.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-